விஸ்வரூபம் திரைப்படத்தால்
ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட கமல் இயக்கும் படத்தில் ரஜினி சம்பளம் வாங்காமல்
நடிப்பதாகக் கூறியுள்ளார்.
விஸ்வரூபம்
படத்திற்கு சென்னை நீதிமன்றம் மீண்டும் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் விரக்தியில் "தமிழகத்தை விட்டே போகப்
போகிறேன்" என்ரறு அறிவித்தார்.
இதனால் பல சினிமாத் துறையினரும் கட்சித் தலைவர்களும் கமலை நேரில் சந்தித்து தங்களது ஆதரவுகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கமலின் நீண்டகால நண்பரும்,
சக கலைஞருமான ரஜினிகாந்த், "கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம்
ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த
நஷ்டத்தை சரிகட்டுவேன்" என்று கூறியுள்ளார்.
Tags
உலகச் செய்திகள்
