முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை ஆராய தெரிவுக்குழு: ஜனாதிபதி


(TM) முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கருத்து தெரிவிக்கையில்,

"நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்திலேயே நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். 

அத்துடன் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இதற்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த தெரிவுக்குழுவின் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை பரப்புவோர் சாட்சியமளிக்க முடியும்.

அத்துடன், இனவாத கருத்துக்களை பரப்பும் பௌத்த பிக்குகளை அழைத்து பேசுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்" என்றார்.

இந்த கூட்டம் தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் பௌசி கருத்து தெரிவிக்கையில்,

"முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை ஒழிக்க ஜனாதிபதி தயாராகவுள்ளார்.  இன்றைய சந்திப்பின் மூலம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை ஜனாதிபதிக்கு காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்" என்றார்.

இந்த கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க, டியூ குணசேகர, ஏ.எச்.எம்பௌசி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ,ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, றிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அப்துல் காதர், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம் மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2 Comments

  1. அமைச்சர் பௌசி அவர்களே... முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையால் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் இதனால் அரசாங்கத்திற்கு நன்மை உள்ளது. அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் நீங்கள் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என்று... நீங்கள் ஜனாதிபதியுடன் பேர்ச்சுவார்த்தை நடத்திய அதே சமயம் குளியாப்பிட்டி நகரில் அல்லாஹ்வின் பெயரை பன்றி உருவத்தில் எழுதி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்... இதற்க்கு என்ன சொல்லப் போகிறது உங்களின் கூட்டு???
    முஸ்லிம்களுகு சொந்தமான பெயரை வைத்துள்ள சிவப்புத்தொப்பி போட்ட நா.ம உறுப்பினரே. உங்களுடைய அறிக்கை எங்கே??????? முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று அறிக்கை ஒன்றை விடாலாமே???????????

    ReplyDelete
  2. stupid.mind ur words n learn disipline first.this matter not a political ok

    ReplyDelete
Previous Post Next Post