திஹாரிய மஹ்பலுல் குர்ஆன் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று காலை 9 மணியளவில் திஹாரிய ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக அல் ஹாபிழ் மௌலவி A.R. அப்துல் வதூத் ( இஹ்சாணி) அவர்களும். சிறப்புப் பேச்சாளராக மௌலவி ஹசன் பரீத் (பின்நூரி) அவர்களும், சிறப்பு அதிதியாகளாக மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ரியால், ஹசனிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மொலவி ரிழா,சலாஹியா அரபுக் கல்லூரி அதிபர் மொலவி இர்ஹாம், ஈமானியா அரபுக் கல்லூரி பணிப்பாளர் மொலவி நிஸ்தார், தன்வீர் அகடமி பணிப்பாளர் மௌலவி இப்ராஹிம், பாதிஹ் கல்வி நிலையத்தின் அதிபர் மௌலவி அகரம் , சபீல்லுச்சலாம் அரபுக் கல்லூரி உப அதிபர் மௌலவி அம்ஜட் அவர்களும் மற்றும் கல்வி மான்களும், ஊர்மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பட்டம் பெற்ற ஹாபிழ்கள்
அல்-ஹாபிழ்கள் M.M.M. யூஸ்ரி
அல்-ஹாபிழ்கள் M.S.M. ஹிஷாம்
அல்-ஹாபிழ்கள் துவான் வஸீர் அஹமட் முர்சீன்
அல்-ஹாபிழ்கள் M.M.M. முன்ஷிப்
Tags
திஹாரிய செய்திகள்