இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை இப்பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆசே மாகாணத்தில் 37 கிலோமீற்றர் ஆழத்தில் 5.9 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 26 நிமிடங்களின் பின்னர் 4.7 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பூமியதிர்ச்சி காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.
Tags
உலகச் செய்திகள்