பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது
செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ள களனி பிரதேச சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
களனி
பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக
கூறப்படும் சந்தேக நபர்கள் ஐந்து பேர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்றுக்கு முன்னால்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள களனி பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர்
மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு பதாதைகளை ஏந்தியுள்ளனர்.
வீரகேசரி