சவூதியில் தாக்குதலுக்குள்ளான இலங்கைப் பணிப்பெண் மருத்துவமனையில்

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, புளூமென்டல் வீதியைச் சேர்ந்த அங்கஸ் பெரேரா என்ற வயது 30 பெண்ணே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரென சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்குள்ளான இப்பெண் காயமடைந்த நிலையில் வீதியில் அநாதரவாக விடப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண், அவரது தொழில்வழங்குனரால்  தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும் காணப்படுவதாகவும் தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post