'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தவுள்ள போராட்டம்..!

முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் விதமாய் கமலஹாஸன் நடிப்பில் வெளிவரும் விஸ்பரூபம் திரைப்படம் கொழும்பின் “சினி சிட்டி“ திரை அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25-01-2013) வெளியிடப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அத்திரைப்பட அரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவதென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுத்துள்ளது. 
எதிர் வரும் வெள்ளி ஜூம்ஆ தொழுகையை அடுத்து, மருதானை சினி சிட்டி திரையரங்கை நோக்கி இம்முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ். அனைத்து முஸ்லிம்களும் அலை கடலென திரண்டு வந்து தம் எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு வாஞ்சையுடன் கேட்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

Post a Comment

Previous Post Next Post