பொது பல சேனா போன்ற
இயக்கங்கள் இனவாதத்தையும் மத பிடிவாதத்தையும் ஊக்குவித்து நாட்டை மற்றுமொரு
அழிவை நோக்கு வழிநடத்துவதாக தென் மாகாண சபை அரச தரப்பு உறுப்பினர் பதேகம
சமித்த தேரர் எச்சரித்துள்ளார். நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்.
நான் பௌத்தத்தை மதிக்கிறேன் அதேவேளை மற்ற
மதங்கள் சார்பில் தோன்றுகிறேன் . பொது பல சேனா , ஹெல உறுமய போன்ற
அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தம்மை ஒழுங்கு படுத்திகொண்டு நாட்டை
அழித்து விட முயற்சிக்கின்றன .
எம்மை நாமே அழிந்துகொண்ட போர்
முடிவுற்றாலும் போராட்டம் இன்னும் முடியவில்லை . எனவே சிங்களவர்களும்
தமிழர்களும் , முஸ்லிம்களும் சமாதானமாக வாழக்கூடிய ஒரு வழிமுறை கண்டிப்பாக
உருவாக்கப் படவேண்டும் .
தமிழ்
மக்கள் சந்திரனை கோரவில்லை , அவர்கள் அதிகார பரவலாக்கத்தை கோருகிறார்கள் .
நாங்கள் தெற்கில் அனுபவிக்கும் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் , தமிழ்
மக்களுக்கும் கிடைக்க செய்யவேண்டும் . பெரும்பான்மையினரின் விருப்பமே
நிலைபெறவேண்டும் என்ற ஹெல உறுமயவின் நம்பிக்கை தவறானதாகும். என்றும் அவர்
தெரிவித்துள்ளார் .
மேலும் அங்கு உரையாற்றியுள்ள பதேகம சமித்த
தேரர் நம் நாட்டில் மேல் நாடு ,கீழ் நாடு (மேல்நாட்டு சிங்களவர் கரையோர
சிங்களவர்) என்ற பிரிவு இன்னும் உள்ளது. தலதா பெரகரவில் ஒருவரும் கீழ்
நாட்டு (கரையோர சிங்களவரின்) நடனத்தை காணமுடியாது. அல்லது ‘யாக் பிறைய’
சத்தத்தை கேட்கமுடியாது . என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The statement of the Ven. Baddegama Samith Thero is the need of the hour. Creating disunity among its own people, as everyone has the right to practice what they want and no body should think on the basis of religion, caste and creed. We are all humans Created by One God Almighty. The best one in the sight of the Almighty God, is the one who is upright, humane, and truthful sans jealousy and hatred.
ReplyDeleteநன்றி சமித தேரர் அவர்களே
ReplyDeleteஉங்களைப் போன்ற தேரர்கள் முன்வந்தால் இந்தக் கடும்போக்குள்ள துவேசிகளை ஒழிக்க முடியும்
ஹஸ்பியல்லாஹ்