அல்கொய்தா, ஜிஹாத், தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அடுத்த மாதம் முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இயக்கங்களுடன் தொடர்பு இருக்கின்றமை உறுதிசெய்யப்படுமானால் 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படுமெனவும் தெரியவருகின்றது.
நன்றி: வீரகேசரி
