எகிப்தின் ஜனாதிபதி Dr.முர்ஸியின் கடந்த 6 மாத ஆட்சியை 63 சதவீத எகிப்தியர்கள் திருப்தி

எகிப்தின் ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முர்ஸி பதவியேற்று 6 மாத கால ஆட்சியில் 63 சதவீத எகிப்தியர்கள் திருப்தியடைந்துள்ளனர் என பஸீரா ஒன்லைன் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 6 மாதங்களில் 6 சதவீத மக்களின் ஆதரவு ஜனாதிபித முர்ஸியின் அரசுக்கும், முர்ஸிக்கும் அதிகரித்துள்ளது. முன்பு நடந்த ஆய்வில் 57 சதவீத மக்கள் மட்டுமே முர்ஸியை ஆதரித்தனர்.

தற்பொழுது 6 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் நல திட்டங்களை ஜனாதிபதி முர்ஸி தொடர்ந்தால் விரைவில் அவரது ஆதரவு 78 சதவீதமாக அதிகரிக்கும் என்று மேலும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி முர்ஸியை ஆதரிப்பவர்களில் 40 சதவீதம் பேர் அவரது முடிவுகளை ஆதரிக்கின்றனர். 23 சதவீதம் பேர் என்ன வந்தாலும் ஜனாதிபதி முர்ஸியை மட்டுமே ஆதரிப்பவர்கள் ஆவர். ஜனாதிபதி முர்ஸியை எதிர்ப்பவர்கள் 28 சதவீதம் பேர் ஆவர். அதில் 19 சதவீதம் பேர் ஜனாதிபதி முர்ஸியின் முடிவுகளை எதிர்க்கின்றனர். 9 சதவீதம் பேர் ஜனாதிபதி முர்ஸியையும், இஹ்வான்களையும் எதிர்ப்பவர்கள். மீதமுள்ள 9 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் சில பத்திரிகையாளர்கள் எடுத்த பேட்டியிலிருந்து, ஜனாதிபதி முர்ஸிக்கு எதிராக ஊடகங்கங்களின் அதி மும்முரமாக வேலை செய்து வருவதால் இந்த சதவீதம் குறைவாக உள்ளது. இல்லையெனில் 80-85 சதவீதத்திற்கு மேல் திருப்தியாக இருக்கக் கூடும் என்று கருதப் படுகின்றது.

1 Comments

Previous Post Next Post