LOLC வங்கியின் இஸ்லாமிய பிரிவின் மீது தாக்குதல்.



காலி நகரில் அமைந்துள்ள எல்.ஓ.எல்.சி. வங்கியின் இஸ்லாமிய பிரிவு மீது நேற்று இனந்தெரியாத நபர்களினால் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வங்கியின் பெயர் பலகை சேதமாகியுள்ளது. 

குறித்த வங்கியில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காலி மிலிந்து வத்தை, தனிபொல் சந்தியில் உள்ள ஹிதாயா வர்த்தக நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த வங்கியின் விளம்பரப் பதாதையை அகற்றுவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நன்றி - விடிவெள்ளி 


Post a Comment

Previous Post Next Post