மஹரகம NOLIMIT ஐ மூடக்கோரி பொதுபலசேனா ஆர்ப்பாட்டம். (படங்கள்)



மஹரகம NOLIMIT  நிறுவனத்தின் முன்னால் இன்று மாலை 4 மணியளவில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய பெளத்த கடும்போக்கு அமைப்புக்களைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தை உடனடியாக மூடக்கொரியெ இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெளத்த பிக்குகள்  உள்ளடங்கிய குழுவினராலேயே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த ஆடையகத்தினுள் அத்துமீறி பெளத்த கடும்போக்காளர்கள் நுழைய முற்பட்ட போது  அங்கு பதற்ற நிலையொன்று ஏற்பட்டது. இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் ஸ்தளத்துக்கு  வந்து பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, அமைச்சர் ரிஷாட் பதுயுத்தீன் மற்றும் சட்டத்தரணி  அலி சப்ரி  ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add caption

Post a Comment

Previous Post Next Post