ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான செரண்திப் நிறுவனத்தின்; (SFRD)
ஏற்பாட்டில் மட்டக்குளி காக்காதீவு முகாம் மாணவர்களுக்கான பாடசாலை
உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு
யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியெற்றப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான
முஸ்லிம் குடும்பங்கள் இம்முகாமில் வசிக்கின்றனர்.
இக்குடும்பங்களைச் சேர்ந்த 132 மாணவர்களுக்கே பாடசாலை உபகரணங்கள்
வழங்கப்பட்டன. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்புப் பிராந்திய நாஸிம்
எம். ஏ.எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கொழும்புப் பிராந்திய
ஜமாஅத் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



