சுற்றுலா பயணிகளை சுமந்து
கொண்டு விண்ணில் பறந்து சென்ற எயார் பலூன் வெடித்து 19 சுற்றுலா பயணிகள்
பலியான சம்பவம் எகிப்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின்
தெற்கு பகுதியில் உள்ள லக்ஸர் (luxor) நகரத்தின் அருகே எயார் பலுன் ஒன்று
சுமார் 1000 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்த போது கேஸ் வெடித்துள்ளது.
இதில் பயணித்த 20 பேரில் 19 பேர் மரணமடைந்தனர். ஒரு பயணியும், பலுனை
இயக்கிய நபரும் தப்பித்தனர்.
இதில் பயணித்த பிரிட்டனை சேர்ந்த 2 பேர்
உள்பட பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட ஐரோப்பா நாட்டை சேர்ந்த சிலரும்,
ஜப்பான், சீனா போன்ற ஆசியாவை சேர்ந்த சிலரும் விபத்தில் பலியாகியிருக்க
கூடும் என தெரிய வந்துள்ளது. இந்த பலூனை இயக்கியவர் 70 சதவீத
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags
உலகச் செய்திகள்