குருணாகல் மாவட்ட நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் கடைகளுக்கு “ஹலால் அடித்து பெரும்பான்மை சிங்கள மக்களின் செல்வத்தை அபகரிக்கும் பர தம்பியா! 2013 மார்ச் மாதத்திற்குள் உனக்கு மரணம்” என மிரட்டல் விடுத்து சிங்கள மொழியில் எழுதப்பட்ட கடிதங்கள் பௌத்த அமைப்புகளின் ஒன்றியம் என்ற பெயரில் பரவலாக முஸ்லிம்களின் கடைகளுக்கு தபால் மூலம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது என்று நாரம்மல தகவல்கள் குறிப்பிடுகின்றன .
இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யத் உலமா, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் குருநாகலை மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார், குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியடசகர் கருணாநாயக்க ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . என்று நாரம்மல முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் .
