ஹலால் வாபஸ் பெற்றுக்கொள்ள மார்ச் 31 வரை கால அவகாசம் - மஹரகமயில் பொதுபல சேனா -படங்கள்


பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் இன்று மஹரகமயில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹலால் சான்றிதழை முற்றாக வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் மார்ச்  31 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், எதிர்வரும் சிங்கள புதுவருடத்தை ஹலாலற்ற பாற்சோறுடன் அனைவரும் கொண்டாட வேண்டுமெனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இது ஒரு பெளத்த நாடு இங்கு ஏனைய சிறுபான்மை மதத்தவர்கள் அதனை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். இன்று நாட்டில் ஹலால் என்ற ஒரு பிரிவினை வாதம் ஏற்பட்டுள்ளது. அது மிகவும் பயங்கரமானது. இது இஸ்லாமிய அடிப்படை வாதத்தை நாட்டில் வளர்க்கிறது. அதனை இலங்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செயற்படுத்தி வருகிறது. அதற்குறிய நிதி சவூதி அராபியாவூடாக அவர்களுக்கு  வழங்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சில அரசியல் வாதிகளும் துணை போகின்றனர். அவர்கள் சிங்கள பெளத்த உரிமையை குப்பைக்குள் போட முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.




Post a Comment

Previous Post Next Post