சிறுமிகளை வைத்து விபசாரம்: 9 பேர் கைது

(TM)எட்டு வயதுக்கும் குறைந்த சிறுமிகளை வைத்து விபாரசாரம் நடத்திய சம்பவம் ஒன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் ஐவர் உட்பட பெண்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறை பொல்ஹேன பகுதியில் மிகவும் இரகசியமான முறையில் இயங்கிவந்த விபசார விடுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

1000 ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர் ஒருவர் போன்று சென்ற பொலிஸ் அதிகாரியே குறித்த பெண்களை கைது செய்துள்ளதுடன் சிறுமிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகளுக்கென தனியான அறையொன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் வெளிநாட்டவர்களும் வந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவரும் அனுராதபுரம் மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post