(VI)ஹலால் சான்றிதழுக்குப் போட்டியாக உணவுப் பொருட்களுக்கு தாமும் ஒரு தரச்
சான்றிதழை அறிமுகப்படுத்தப் போவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
அகில இலங்கை பௌத்த காங்கிரசுடன் இணைந்து தமது அமைச்சு மூலம் புதிய தரச்
சான்றிதழ் ஒன்றை வழங்குவது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ஆய்வு மற்றும்
தொழில்நுட்ப அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எஸ்.எல்.எஸ்.தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பில்
கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். மதுசார கலப்படமற்ற பொருட்களுக்கு இச்
சான்றிதழ் வழங்கப்படும்.
மாமிசமற்ற மற்றும் மதுசாரக் கலப்படமற்ற பொருட்களை அடையாளம் காண்பதில்
சிக்கல்கள் ஏற்படாதவாறு இந்த தரச் சான்றிதழ் வழங்கும் முறைமை
வடிவமைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழை சிங்கள
புதுவருடத்திற்கு முன்னர் வாபஸ் பெற வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அண்மையில்
காலக்கெடுவிதித்திருந்தது.
இந்நிலையில் ஹலால் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள சர்ச்சை நிலைக்கு தீர்வு
காணும் வகையில் முஸ்லிம்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு
மாத்திரம் ஹலால் சான்றிதழ் அவசியம் எனவும் முஸ்லிமல்லாதோருக்கு விற்பனை
செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் அவசியம் இல்லை எனவும் அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

very Funny...
ReplyDelete