(TN) பௌத்த - முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காக இரு மதத் தலைவர்களுக்கும் இடையில் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் கம்புறுப்பிட்டிய தேரர், களனி பல்கழைக்கழக வேந்தர் வெல்லம்வல தேரர் என முஸ்லிம், சிங்கள புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய களனி பல்கழைக்கழக வேந்தர் வெல்லம்வெல தேரர் கூறுகையில்,
'இந்த நாட்டில் 8 சதவீதமான முஸ்லிம்கள் மாத்திரமே வாழ்கின்றனர். ஆனால் 80 சதவீதமான பொளத்தர்களும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப்பண்டங்களையே வாங்க வேண்டியுள்ளது.
ஹலால் சான்றிதழ் பெறுவதற்காக ஐம்மியத்துல் உலமா சபை, பணம் அறவிடுகின்றது. இதனை முஸ்லிம் தலைவர்கள் மீள்பரீசிலனை செய்ய வேண்டும்.



