கொலை மற்றும் போதை மருந்துக் கடத்தலில் ஈடுபட்ட மூன்று சவுதி அரேபிய பிரஜைகளுக்கு நேற்றும், நேற்நு முன் தினதுமும் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதீனாவில் வைத்து ஏற்பட்ட தகராறொன்றில் சைப் அல் வப்சி என்பவரைக் குத்திக் கொலை செய்த மர்வான் அல் பாலாவி மற்றும் நஜ்ரான் மாகாணத்தில் ஹமட் அல் ஜாபர் என்பவரைக் கொலை செய்த ஹுசைன் அல் யாமி ஆகிய இரு சவுதிப் பிரஜைகளுக்கு புதன்கிழமையன்று தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி உள்நாட்டு விவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை போதைப் பொருல் கடத்தலில் ஈடுபட்டிருந்த முசெய்த் அல் ருவேலி எனும் சவுதிப் பிரஜைக்கு செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இத்துடன் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் உட்பட சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும் சவுதிப் பிரஜைகளின் எண்ணிக்கை ஐந்தாகவும் உயர்ந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Tags
உலகச் செய்திகள்
