ஹலால் சான்றிதழ் தொடர்பில் இன்று 14-02-2103 அமைச்சரவைக் கூட்டம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்நிலையில் நடைபெற்றது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளசி, ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன் மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோருடன் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது அதிகரித்துவிட்டதென அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சுமத்திய போது இடைமறித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்கள் பின்பற்றுவதை நீங்கள் சந்தேகத்துடன் நோக்காதிர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹலால் சான்றிதழ் பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், "ஹலால் உணவுகளை முஸ்லிம்கள் உண்பது முஸ்லிம்களுக்கு கடமையயெனவும், இது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பொழுது குறிக்கிட்ட அமைச்சர் பௌஸி ''உனக்கு ஹலால் விருப்பமில்லையென்றால் அந்த உணவை சாப்பிடாதே'' என உரத்த குரலில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தொடர்ந்து ஹலால் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்ததால் அமைச்சரவையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அமைச்சரவை கூட்டம் குழப்பத்துடனேயே நிறைவு பெற்றுள்ளது.
