எரிபொருள்
விலை ஏற்றத்திற்கு அமைய உடனடியாக பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது
தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்
அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று தமது தொழிற்சங்கத்தின் சபை கூடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் உடனடியாக தேசிய கொள்கைக்கு அமைவான பஸ் கட்டண திருத்தம் அல்லது எரிபொருள் மானியம் தேவைப்படுவதாக அதன் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் கூறியுள்ளார்.
இறுதியாக கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் திகதி ஒக்டேன் 90 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கையை பெற்றோலிய துறையின் தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.
இந்த நடவடிக்கையில் மக்கள் மீதான சுமை மேலும் அதிகரிக்கப்படுவதாக தேசிய ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன கிளை செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.