கொழும்பு மெனிங் (மார்க்கட் )சந்தை பேலியகொடைக்கு இடம் மாறும்!

01 Manning Market -GOSL Meeting with Traders  Officersகொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் (மார்க்கட்) சந்தை பேலியகொடைக்கு இடமாற்றப்படும். பேலியகொடையில் அமைந்துள்ள மீன் சந்தைக்கு அருகில் 25 ஏக்கர் காணியில் உத்தேச சந்தை நிர்மாணிக்கப்படும்  என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ  நேற்று முற்பகல் தனது அமைச்சில் நடத்திய இது தொடர்பான கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நகர அபிருத்தி அதிகார சபை, கூட்டுறவு மற்றும் உள்ளுர் வர்த்தம் தொடர்பான அமைச்சு, துறைமுக ,நெடுஞ்சாலைகள் அமைச்சு ,மேல் மாகாண சபை, கொழும்பு மாநகர சபை ,பேலியகொடை நகர சபை உட்பட மெனிங் சந்தை வர்த்தகர் சங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள மேற்படி சந்தை கட்டிடத் தொகுதியில், 120 சதுர அடிகளைக் கொண்ட 400 மொத்த வியாபார கடைகளும், 662 சில்லறைக்கடைகளும் அமைக்கப்படும்.

அத்துடன் மரக்கறி மற்றும் பழவகைகளை ஏற்றுமதிச் செயவதற்காக தயார் படுத்துவதற்கான இடம் ,ஊழியர்களுக்கான ஓய்வூதிய விடுதி, சிற்றுண்டிச் சாலைகள் , 135 லொரிகளை நிறுத்துவதற்காக இரண்டு தரிப்பிடங்கள், 200 மோட்டார் வாகனங்கள்  நிறுத்துவதற்கான பாரிய தரிப்பிடம் என்பனவும் இதில் உள்ளடக்கப்படும். அதற்காக அரசாங்கம் 135 கோடியே 700 லட்சம் ரூபாவை செலவிடும் எனவும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புறக்கோட்டையில் தற்போதைய மெனிங் சந்தை அமைந்துள்ள இடத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய பஸ் தரிப்பிடம் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கான கடை தொகுதி ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

02. Some of the participants of Manning Market Meeting
3 Manning Market Today Feb 11 2013
5 Manning Market Today Feb 11 2013

Post a Comment

Previous Post Next Post