பொதுபலசேனா, சிங்கள ராவய ஆகிய அமைப்புக்கள் நாடு பூராகவும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் அவற்றை தடை செய்யவேண்டும் எனவும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறித்தியுள்ளார்.
நேற்றையா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எதிர்வரும் 17 ஆம் திகதி மஹரகம நகரில் இவ்விரு அமைப்புக்களும் இணைந்து நடத்தவுள்ள 'பொது சமுலுவ' என்ற ஒன்றிணைந்த மாநாட்டை நிறுத்த வேண்டும். என தெரிவித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தனவின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை முவைத்துள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் தினேஷின் கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நன்றி : விடிவெள்ளி
