‘முஸ்லிகளுக்கும் ஹலால் வேண்டாம்’ : பொதுபலசேனா


இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தற்போது அமுலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முஸ்லிம்கடைகள், சிங்களப் பெண்களை மலடாக்கும் ஒரு ரகசியப் பொருள் கலக்கப்பட்ட மிட்டாய்களை விற்பதாகக்கூட சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஆலோசகராக இருந்த ஹரிம் பீரிஸ், இந்தப் பிரச்சாரத்தை, 1930களில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனா அமைப்பை அரசாங்க அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்றபோதிலும், அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள ஒருசில தரப்புக்களில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post