ஈரானில் புத்தர் சிலைகள் விற்பனைக்கு தடை என வெளியான செய்தி பொய்யானது - ஈரான்


ஈரானுக்கு புத்தர் சிலைகளை இறக்குமதி செய்வது மற்றும் விற்பனை செய்வதற்கு தடை என்ற செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
 
ஈரானில் புத்தர் சிலைகள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்த நிலையிலேயே, ஈரான் இவ்வாறு தமது மறுப்பறிக்கையினை வெளியிட்டுள்ளது.
 
ஈரானில் புத்தர் சிலைகளை விற்பனை செய்வது தடை என்ற செய்தியானது திரிபுப்படுத்தப்பட்ட ஒன்றாகும் என்று ஈரான் கலாசார துறை செயலாளர் சைட் ஜபார் குறிப்பிட்டுள்ளார்.
 
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சிலைகளுக்கே தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post