விலை உயர்ந்த் வைர மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிச்சைக்காரர்!

விலை உயர்ந்த் வைர மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிச்சைக்காரர்!பிச்சைக்காரரிடம் தவற விட்ட வைர மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்ததால் அந்த பிச்சைக்காரர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 
 
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த சாரா என்ற பெண் ரோட்டில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கு உதவினார். அப்போது அவரது விலை உயர்ந்த வைர மோதிரத்தை அங்கேயே தவறவிட்டு விட்டார்.

இதை அறியாத அந்த பெண் அடுத்த நாள், தன் விரலில் அணிந்திருந்த, வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல்  பிச்சைக்காரரிடம் சென்று விசாரித்தார்.

அப்போது அந்த பிச்சைக்காரர், "அந்த மோதிரம் என்னிடம் தான் உள்ளது. உங்கள் இருப்பிடம் தெரியவில்லை, ஒருவேலை அதை தேடி வருவீர்கள் என்று காத்திருந்தேன்" என மோதிரத்தை சாராவிடம்  கொடுத்தார். உடனே நெகிழ்ந்து போன சாரா, தன் கணவருடன் இணைந்து நேர்மையான அந்த பிச்சைக்காரருக்கு நிதியுதவி அளிக்குமாறு இணையதளம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் மூலம் அவருக்கு பல உதவிகளும் பாராட்டுகளும் கிடைப்பதாக கூறப் படுகிறது.

Post a Comment

Previous Post Next Post