வரகாபொலையில் பொதுபலசேனாவின் ஹலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.



பொதுபலசேனா  அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஹலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று இன்று மாலை வரகாபொலையில் நடைபெற்றது. 

சுமார்  200 மேற்பட்ட பெளத்த பிக்குகள் அடங்கிய குழு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதும் வரகாபொலை நகரைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பட்டத்திற்கு முன்னதாக ஒரு வீட்டிலிருந்து இருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பொதுபலசேனாவால் கோரப்பட்டிருந்ததாகவும் அவ்வூர் மக்கள் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிகிறது. 

இன்றையா இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்பில் எதிர்ப்புத்தெரிவிக்கும் வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தியதாகவும்,  முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான வார்த்தைப்பிரயோகங்களும் , முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கொள்வனவை தவிர்த்துக்கொள்ளுமாறு கோஷமெழுப்பியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன. அத்துடன் அச்சிடப்பட்ட ஹலால் சான்றிதழை பாதணிகள் கொண்டு மிதித்து முகவும் கேவலமான முறையில் பேரினவாதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணாமாக அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில் பொலிசார் உஷார் நிலையில் வைக்கபட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post