மகாவலி கங்கையில் மூழ்கி ஐவர் பலி

நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கைக்கு குளிக்கச் சென்ற ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கம்பளை வட்டதெனிய ஆகிய பகுதிகளிலிருந்து  சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலரே அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ளனர்.

  நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

24 முதல் 25 வயதுக்கு இடையிலான இளைஞர்களே நீரி்ல் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்  மேலதிக விசாரணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post