கோவையைச் சேர்ந்தவர் நடராஜன்
என்பவரது மனைவி சரோஜினி. வயது 54. இவரை கடந்த 16 ஆம் தேதி முதல் காண வில்லை
என காவல்துறையில் அவரது கணவர் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில்
சரோஜினியின் வீட்டுக்கு எதிரே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து
துர்நாற்றம் வருவதாக அண்டை வீட்டார் தெரிவித்தனர்.
அந்த வீட்டை உடைத்துச் சோதனையிட்ட
நிலையில் இரு சூட்கேஸ்களில் பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்
பட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
சூட்கேசில் இருந்த உடல் சரோஜினியின் உடல் தான் என அவரது குடும்பத்தினர்
அடையாளம் காட்டினர்.
சரோஜினியின் உடல் கண்டெடுக்கப் பட்ட
அடுக்குமாடிக் குடியிருப்பில் திருநெல்வேலி மேலப் பாளையத்தைச் சேர்ந்த
யாசர் அராபத் என்பவர் தங்கி இருந்ததாகக் கூறப் படுகிறது. செல்போன் டவர்
அமைக்கும் கம்பெனி ஒன்றில் தாம் வேலை பார்த்து வருவதாக யாசர் அராபத்
பக்கத்து வீட்டாரிடம் கூறி வந்துள்ளார்.
சரோஜினி கொலை செய்ய பட்ட நாள் முதல் யாசர்
அராபத் தலைமறைவாகி விட்டதாகக் கூறப் படுகிறது. போலீசார் யாசர் அராபத்தை
தேடி வருகின்றனர். யாசர் அராபத்தின் பாஸ்போர்ட்டை போலீசார்
முடக்கியுள்ளனர். சரோஜினி கொலை செய்யப் பட்டதற்கான காரணம் குறித்து
போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Tags
உலகச் செய்திகள்