இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் பொதுபலசேனா அமைப்புக்குமிடையிலான
சந்திப்பொன்று அவ் அமைப்பின் தலைமையகமான ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தியில் நேற்று காலை நடைபெற்றது.
ஈரானில் புத்தர் சிலை விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியான
செய்திகள் தொடர்பிலும் கொழும்பிலுள்ள சிங்கள பாடசாலைகளுக்கு ஈரான்
தூதரகத்தினால் இஸ்லாம் தொடர்பான நூல்கள் விநியோகிக்கப்படுவது தொடர்பில்
பொதுபல சேனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் தெளிவுபடுத்தும்
நோக்கிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றதாக ஈரான் தூதரக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்ட காலமாக நல்லுறவு பேணப்பட்டு
வருகிறது. இந்த உறவு தொடர்ந்தும் பேணப்படும். புத்தர் சிலைகளுக்கு ஈரானில்
தடைவிதிக்கப்படவில்லை . அவ்வாறு வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை
என இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி மொஹமட் நபி ஹசனி பொதுபலசேனா
அமைப்பிடம் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் தமது பிரதிநிதிகளுக்கு ஈரான் வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது
தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் நேற்று இலங்கைக்கான ஈரான்
தூதுவருக்கும் பொது பல சேனா அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்ற
கலந்துரையாடலின் போதே தூதுவர் இந்த அழைப்பை விடுத்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
