வெள்ளை வேனில் வந்த குழுவொன்றினால் அத்தனகல்ல வெலகெதர பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டவரின் மனைவி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஒருவரே கடத்தப்பட்டுள்ளார்.
வெள்ளை வேனில் வந்தவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என தம்மை
அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த நபரை கடத்திச் சென்றுள்ளதாக
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.