காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜூஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்


(அஹமட் ஜிப்ரி)
காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜூஆப் பள்ளிவாசல் மீது இன்று (22) அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களை எரிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. அத்துடன் வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் சிதறிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இச்  சம்பவம் தொடர்பாக  பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்ததையடுத்து நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காலி பிரதேச பிரதம பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக புலன் விசாரணை நடாத்துமாறும், பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post