ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய ஐக்கிய தேசியக்கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீமின் வழிகாட்டலின் கீழ், அசாத்சாலி அப்துல் கலிம், பய்ருஸ் பாஜியா, எம்.என்.நசீட் மற்றும் முஜிபர் ரகுமான் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
ஹலால் பிரச்சினைகளுக்கான காரணம், இதற்கு பொது பல சேனா மற்றும் அரசு மேற்கொண்ட நடைமுறைகள் தொடர்பில், இந்தக் குழு அவதானம் செலுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் 100 வீதம் சாத்தியமற்றவை எனவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஹலால் என்பது சுத்தமான உணவு என்பதை உறுதிப்படுத்த வழங்கும் சான்றிதழ் மாத்திரமே என இங்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரவித்தார்.
