இன்று பொதுபலசேனா பிரதிநிதிகள் மற்றும் ஈரான் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் நபி ஹசனி போரிற்கும் பொதுபலசேன அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பு அநேகமாக நாளை திங்கட்கிழமை இன்று இடம்பெறும் என்றும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்த சந்திப்பு சம்புத்த ஜயந்தி நிலையத்திலேயே  இடம்பெறவுள்ளதாக கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலய வட்டாரங்கள் தெரிவித்தன.

சமயமொன்றை பரப்பும் வகையிலான புத்தங்களை கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவராலயம் பாடசாலைகளில் விநியோகிப்பதாக அண்மையில் பொதுபலசேன குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post