முஸ்லிம் கவுன்சில் இன்று மஹானாயக்க தேரரை சந்தித்ததுக் கலந்துரையாடியது:படங்கள்

கலந்துரையாடல்கள் மூலம் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சிறந்தது என மல்வத்து பீட மஹாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஹலால் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையினை வரவேற்ற அவர், அரசாங்க நிறுவனமொன்றிடம் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை கையளிப்பது சிறந்தது எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகளுக்கும் மல்வத்து பீட மஹாநாயக்க தேரரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

பல நூற்றாண்டுகளாக காணப்பட்டு வரும் சிங்கள முஸ்லிம் உறவில் எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்த கூடாது என தேரர் தெரிவித்ததாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

இரு இனங்களுக்கும் இடையிலான உறவு மேலும் தொடர வேண்டும். இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்ககொள்ளப்பட வேண்டும் எனவும் தேரர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகள் தன்னை சந்தித்தமை முக்கியத்துவமிக்கது என மஹாநயக்க தேரர் குறிப்பிட்டார் என என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.


சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.எம்.சுஹைர், சிப்லி அஸீஸ், இக்ரம் முஹம்மட், கலாநிதி எம்.ஏ.சுக்ரி மற்றும் மௌலவி இப்றாஹீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
படங்கள் : KNOWLEDGE BOX 

Post a Comment

Previous Post Next Post