மொஹமட் சப்ராஸ் பௌத்தமத குருவானான்' என்ற செய்தி சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கொஸ்வத்த துடுகெமுனு மாவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் அநீசா செய்னுல் என்பவற்றின் இரண்டாவது புதல்வராவர் என்று தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி உண்மையோ? பொய்யோ? நாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
உண்மையில் எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள மிக முக்கிய ஒரு பிரச்சினையாகும். இலங்கைத் திரு நாட்டில் முஸ்லிம்கள் அநேகமானோர் முஸ்லிம் கிராமங்களிலேயே ஒரு சமூக அமைப்பாக வாழ்ந்து கொண்டிறிக்கிரார்கள். ஆனாலும் சிலர் அந்நிய சமூகங்களுடன் இணைந்து அந்நியப் பிதேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு இஸ்லாமியப் போதனைகள், பள்ளிவாசல்களுடனான தொடர்புகள் என்பன கிடைக்காமல் செல்கின்ற ஒரு துரதிஷ்ட நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே இவர்கள் பற்றிய தரவுகள் திரட்டப்பட்டு எமது இஸ்லாமிய அமைப்புகள் இதற்கான பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இவர்களுக்கான சகல சன்மார்க்க வழிகாட்டல்கலைய வழங்க வேண்டும். இல்லாதவிடத்து கலப்புப் பிரதேசங்களில் வாழும் எம் முஸ்லிம் சகோதரர்களின் நிலைமை கேள்விக்குறியாகவே இருக்கும். இது போன்ற பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் நிலவ வாய்ப்புக்கள் அதிகமாகவே உண்டு என்பதை நிகழ்காலம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

எமது உலமா சபையும் முஸ்லீம்களின் தலைவர்களும் கவனிக்க வேண்டிய கட்டாயமான விடயம்.
ReplyDeleteOur leading moulavi and ulamas not for their comunity and they are doing nothing. They look for their own profits only. Some of the ulama(Alim) would like to travel in the business class. During the haj, some the moulavi imports goods for bussines (including cigeretes). Totaly the Muslim leaders never do nothing for their own community. Totaly they are selfished and they talk bullshit.....
ReplyDelete