இஸ்லாம் மீதான அழுத்தங்கள் குறித்து அரசாங்கம் சுயாதீன விசாரணையை முன்னெடுக்கின்றதா?


ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அந்தப் பகுதிகளில் இஸ்லாம் சமய ஸ்தலங்கள் மீதான அழுத்தங்கள் குறித்து அரசாங்கம் சுயாதீன விசாரணையை முன்னெடுக்கின்றதா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இனவாத மற்றும் மதவாத மோதல்களும் கலகங்களும் ஏற்படாதவாறு பொறுமையுடனும் தீர்க்கத்தரிசனத்துடனும் செயற்படவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருப்பதைப் போன்றே எதிர்க்கட்சிக்கும் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
newsfirst.lk

Post a Comment

Previous Post Next Post