ஒரு பொருளுக்கு ஹலால் சான்றிதழ் கேட்கப் படுகின்ற பொழுது அதனை ஜம்மியத்துல் உலமா வழங்குகிறது, அதனை உற்பத்தி செய்பவர்கள் சந்தைப் படுத்துபவர்கள் ஏற்றுமதி செய்பவர்கள் தான் தாம் ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களை எவர் மீதாவது திணிக்கின்றோமா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டும்...ஜம்மியத்துல் உலமா அல்ல.
சான்றிதழ் பெரும் கம்பனிகளை அழைத்து ஜம்மிய்யதுள் உலமா பேச வேண்டும், அத்தோடு சான்றிதல்களை அவர்கள் சுயாட்சையாகவே வர்த்தக சந்தைப் படுத்தல் நோக்கங்களுக்காக பெறுகின்றார்கள் என்பதற்கான ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.
அவர்கள் தேவைப்படின் ஹலால் சான்றிதழ் பெற்ற உற்பத்திப் பொருட்களையும் பெறப்படாத பொருட்களையும் சந்தைப் படுத்தலாம், அது அவர்களின் தெரிவு அதற்காக ஹலால் சான்றிதழை ஒழிக்க பிரகடனம் செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும் அதற்கு நாங்கள் மாத்திரமல்ல சான்றிதழ் பெரும் கம்பனிகளும் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
ஹலால் சான்றிதழ் பெறப்படுவதனால் தாம் அதிக இலாபமீட்டுவதாக கூறும் கம்பனிகள் ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருள்களின் விலையை சந்தையில் குறைத்து விற்க வேண்டும்.
சுதேச பொருளாதாரத்திற்கு ஹலால் சான்றிதழ் பெரும் பங்களிப்பினைச் செய்வது குறித்த சந்தைப்படுத்தல் வர்த்தக வாணிப ஆய்வொன்றை துறை சார் நிபுணர்களைக் கொண்டு தயாரித்து வெளியிட ஜம்மியத்துல் உலமா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு ஹலால் சான்றிதழ் மென்மேலும் அங்கீகாரம் பெறுகின்ற ஒரு வருடமாக இருக்கும், அது குறித்த தெளிவு அடுத்த சமூகங்களையும் சென்றடைகின்ற வருடமாக இருக்கும். ஹலால் சான்றிதழ் சமூகம் வாழ்ந்திருக்கிறது வாழவும் முடியும்.
ஆனால் இந்த நாட்டின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஹலால் சான்றிதழை வாழ வைப்பதோடு, இந்த நாட்டின் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலாத் துறை அதிகார சபை, முதலீட்டு ஊக்குவிப்பு சபை ஆகியன சுதேச பொருளாதாரத்தின் பிரதான தரச் சான்றிதழாக "ஹலால்" சான்றிதழை கட்டாயப் படுத்துவார்கள்.
அது சிங்கள பௌத்தர்களின் மாத்திரமல்ல முழு இலங்கயரதும் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத ஊக்கியாக மாறும் ! 2013 ஹலால் சான்றிதழ் மறுமலர்ச்சி பெரும் ஆண்டாக எதிர்மறையாக பிரகடனப் படுத்திய இனவாத கும்பல் செய்த சூனியம் தமக்கே திரும்புவதனை கண்டு கொள்வார்கள். இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தின் எந்தப் போதனையும் பொருளாதார வீழ்ச்சியிற்கோ வழி வகுப்பதில்லை அது முழு மனித குல மேம்பாட்டிற்கும் வழி சொல்கிறது.