ஹலால் சான்றிதழ் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கரமனாயக தலைமயில் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று வியாழகிழமை பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது ஹலால் சான்றிதழ் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க மேலும் ஒரு மாதகாலத்தை ஜனாதிபதியிடம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு மாதகால காலத்தில் அனைத்து கட்சிகளுடன் கலந்தரையாடல் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் சிராரிசுகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதிடம் கையளிக்கப்படடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
