ஜுனைட் நஸீர் (நளீமி)
65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தினர் ஏற்பாடு செய்த மர நடுகை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசல், பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளிவாசல், அலையடிவேம்பு கிறிஸ்தவ தேவாலயம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம், அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயம், அக்கரைப்பற்று பிரதேச சபை, பள்ளிக்குடிருப்பு முஹம்மதிய்யா அல்-குர்ஆன் மனன கலாசாலை ஆகிய இடங்களில் மர நடுகையும், மர விநியோகமும் நடைபெற்றது.

