அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழை வழங்கும் உரிமையை அரசாங்கத்திடம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இன்று மாலை இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று ஜமியத்துல் உலமா சபையின் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரித்த ஜமயத் உலமா சபையின் தலைவர் தற்போது இந்த சான்றிதழ் வழங்குவதற்கு அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள தமது சபை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
ஹலால் சான்றிழ் வழங்குவது தொடர்பில், பௌத்த அடிப்படை வாதஅமைப்பான பொதுபல சேனா எழுப்பிய சர்ச்சையைத் தொர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
