மாதம்பை இஸ்லாஹிய்யாவில் கொண்டாடிய தேசிய சுதந்திர தின நிகழ்வு


(ஸஜாத் முஹம்மத்)
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் 65 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (04-02-2013) மாலை சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. மாதம்பை விகாரை விகாராதிபதி, பிரதேச சபை உறுப்பினர்கள், மாதம்பை பிரதம பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் உற்பட 300 இற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இஸ்லாஹிய்யாவின் வளர்ச்சியில் பங்காற்றிய நலன் விரும்பிகள், மாதம்பை பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவர்கள், வைத்தியர்கள், சுகாதார பரிசேகர்கள்,   இஸ்லாஹிய்யாவில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள்;, ஏனைய பிரதிநிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் மாதம்பை அரச நிறுவணங்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இவர்களுக்கான இராப்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Post a Comment

Previous Post Next Post