ஹலால் சான்றிதழ் குறித்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் ஹலால் சான்றிதழை நிறுத்துவது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிந்திக்க வேண்டாம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹலால் விடயம் குறித்து நேற்றையதினம் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் ஜமிய்யதுல் உலமா உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடிய போது ஸ்தலத்துக்கு வந்த அமைச்சர் பஷில் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழை நிறுத்துவது குறித்து சிந்திக்காதீர்கள். அது அவசியமானதாகும் என இதன்போது அமைச்சர் பஷில் தெரிவித்ததாக அறியமுடிகிறது.
இதனிடையே ஹலால் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தெஹிவளை பள்ளிவாசலில் விஷேட கூட்டமொன்று இன்று மாலை இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : விடிவெள்ளி
