அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திபொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை 19.02.2013 இடம்பெறவுள்ளது. இடம்பெறப்போகும் சந்திப்பில் ஹாலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பில் எழுதுள்ள பிரச்சினைகள் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஜம்இயதுல் உலமா முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது. ஒரு சில கடும்போக்கு வாதிகளினால் பரபட்டுவரும் பரப்புரைகள் எதிர்ப்புக்கள் தொடர்பிலும் மற்றும் ஆளும்தரப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவர் முன்வைத்துள்ள ஹலால் தொடர்பான அறிவித்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அதேவேளை நாளை தெஹிவளையில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது. நாளை இடம்பெறப்போகும் சந்திப்பில் ஹலால் சான்றிதழுக்கு எதிராக முன்வைக்கப் படும் குற்றசாட்டுக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு சில ஆலோசனைகள் பெறப்படவுள்ளது.
நன்றி : லங்கா முஸ்லிம்
