பொது பல சேனாவை தடை செய்ய வேண்டும் என்பதை ஏற்றுகொள்ள முடியாது-கெஹெலிய


பொது பல சேனா அமைப்பு மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவருகிறது, இவ்வாறான கடும்போக்கு அமைப்புக்களை அரசு ஏன் தடை செய்யாது உள்ளது?  என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.
இது ஒரு ஜனநாயக நாடு . இங்கு பொது பல சேனா மட்டுமன்றி ஏனைய அமைப்புக்களுக்கும் செயற்படலாம். பொது பல சேனா என்பது ஒரு அமைப்பு மட்டுமே. அவர்களுடன் மட்டுமன்றி ஏனைய அமைப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். எனவே பொது பல  சேனாவை தடை செய்யவேண்டும் எனக்கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post