சிறுவர்கள் மனதில குரோதம் உருவாகக் கூடிய வகையில் பெரியவர்கள் செயற்படக் கூடாத என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறுவர்களிடத்தில் மனிதத் தன்மையை மேம்படுத்துவதே அரசின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற பாடசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சமமான கல்வியை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்களை, அரசு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மதவாதத்தை தூண்டக் கூடிய கருத்துக்கள் சிறுவர்களின் முன்னிலையில் வெளியிடுவது ஆபத்தானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
