வாழ்வாதாரம் தேடி வந்த குவைத் நாட்டின் 52வது தேசிய மற்றும் 22வது விடுதலை தினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்... சங்கத்தின் 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து "உங்கள் பேச்சு... மவுனத்தை விட அழகானது!" என்ற கருப்பொருளில் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கும் "மக்கள் பேச்சரங்கம்" என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
நாள்:
22.02.2013 வெள்ளிக்கிழமை - ஹிஜ்ரீ 1434 ரபீவுல் ஆஃகிர் பிறை 12
நேரம்:
இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை...
இடம்:
K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.
தலைப்பு:
மாமறை வழங்கிய மாநபி (ஸல்)...! என் பார்வையில்...!!
பங்கேற்போர்:
குவைத் வாழ் தமிழ் மக்கள்
பேச்சரங்க விதிமுறைகள்:
- குவைத் வாழ் தமிழ் மொழி பேசும் சமயம், மதம் மற்றும் அமைப்பு வேறுபாடின்றி ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
- வயது வரம்பு கிடையாது.
- பெயர் மற்றும் உள் தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்படும்.
- 5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.
- சிறப்பாக உரையாற்றும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
- கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
- முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
- முன்பதிவு செய்ய கடைசி நாள் : 22.02.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை... இன்ஷா அல்லாஹ்...
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
நன்றி! வஸ்ஸலாம்.
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
Tags
உலகச் செய்திகள்
