அரசியல் களம் : லண்டனில் இருந்து நேரடி ஒலிபரப்பு !




இலங்கையில் வளர்ந்து வரும் இனவிரோதம், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உலகறியச்செய்யும் ஒரு முயற்சியாக இன்று மாலை லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அரசியல் களம் நேரடி நிகழ்ச்யை சகோதர இணையத்தளமான சோனகர் வலைத்தளத்தின் அனுமதியுடன் எமது திஹாரிய நியூஸ் இணையத்தளத்தில் நேரடியாக ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.

இன் நிகழ்ச்சியில் பொது பல சேனா, அஸாத் சாலி, அப்துல் சத்தார் (குருணாகலை நகர சபை உறுப்பினர்) உட்பட பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நிகழ்ச்சியில் நேயர்களும் இணைந்து கொள்ளலாம், வெளிநாடகளில் இருப்பவர்கள் இணைந்து கொள்ள “ஸ்கைப் மூலம்” ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகள் உறுதி செய்யப்பட்டதும் முழுமையான விபரங்களை இங்கே இணைத்துக்கொள்கிறோம்.

நிகழச்சியில் பொதுபலசேனாவிடமோ அல்லது அரசியல் தலைமைகளிடமோ உங்கள் கேள்விகளும் இணைத்துக்கொள்ளப்பட விரும்பினால் உங்கள் கேள்வியையும் அது  யாரிடம் கேட்கப்பட வேண்டும் என்பதையும் editor@sonakar.com என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

நிகழ்ச்சியை சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்பான் இக்பால் லண்டன் கலையகத்திலிருந்து தொகுத்து வழங்கவிருக்கிறார்.

இலங்கை நேரப்படி  இன்று  இரவு 8.30 இற்கு இந்த நிகழ்ச்சியை திஹாரிய நியூஸ் இணையத்தில் நேரடியாக கேட்கலாம்.

உங்கள் நண்பர்களுடனும் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சமூகத்தின் குரலை உலகம் எங்கும் கேட்கச் செய்வோம் !

Post a Comment

Previous Post Next Post