நாட்டில் தற்போது தோன்றியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அஸ்கிரிய பீடத்துடன் நேற்று புதன்கிழமை, 27 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டது.
இச்சந்திப்பில் ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் கூறியதாவது, இச் சந்திப்பில் அஸ்கிரிய தலைமை பீடாதிபதி கலந்துகொள்ளவில்லை, அவரது உதவியாளர்கள்
மற்றும் அவருக்கு இடண்டாமிடத்திலுள்ள பௌத்த தேரர்களே கலந்துகொண்டனர்.
ஜம்மியத்துல் உலமா சபை அவர்களுடன் அதிகளவு நேரம் உரையாடியது. எங்கள்
நிலைப்பாட்டை அவர்களுக்கு அறியப்படுத்தினோம். எமதுபக்க வாதங்கள் மற்றும்
தெளிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை நாம் அறியாவிட்டாலும்
சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக அமைந்திருந்தது.
அஸ்கிரிய பீடாதிபதிகள் சார்பில் பதில் வழங்கியவர்கள், சகல தரப்புகளும்
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என தெரிவித்துக் கொண்டார்கள்.
படங்கள் : Knowledge Box



